- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகம் முழுவதும் 7 நகரங்களில் மக்களுடன் அன்புமணி கலந்துரையாடல்

சென்னை, மார்ச். 10-
தமிழகம் முழுவதும் 7 நகரங்களில் மக்களுடன் அன்புமணி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துகிறார். இன்று தொடங்கி 16 வரை இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது.
இது குறித்து பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
7 நகரங்களில்
‘மக்கள் வளர்ச்சி பற்றி அன்புமணி’ என்ற தலைப்பில் 7 நாட்களுக்கு 7 நகரங்களில், 7 தலைப்புகளில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரையாற்ற உள்ளார். முதல் நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) வேலூர் ஊரிசு கல்லூரி காப் அரங்கத்தில் ‘சுகாதாரம் குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
11–-ந் தேதி சேலம் தெய்வீகம் திருமண அரங்கத்தில் ‘மது ஒழிப்புக் குறித்து அன்புமணி’ என்ற தலைப்பிலும், 12–-ந் தேதி (சனிக்கிழமை) கோவை கமலம் துரைசாமி அரங்கத்தில் ‘தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அன்புமணி’ என்ற தலைப்பிலும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுகிறார்.
சென்னையில்…
‘வேளாண் புரட்சி குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் திருச்சி திருவானைக்காவல் ஏ.கே.மகாலில் 13-–ந் தேதி  ‘ஊழல் ஒழிப்பு குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் மதுரை பிரண்ட்ஸ் மகாலில் 14–-ந் தேதி ‘தரமான கல்வி குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் நெல்லை ஆரியாஸ் அபினயா மகாலில் 15–-ந் தேதி  டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுகிறார்.
நிறைவாக 16-ந் தேதி சென்னை அண்ணா அரங்கத்தில் ‘சென்னை பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் குறித்து அன்புமணி’ என்ற தலைப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரையாற்ற உள்ளார்.
உரையாடல்
அன்புமணி ராமதாசின் இந்த நிகழ்வுகள் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும். முதல் ஒரு மணி நேரத்திற்கு இந்த தலைப்புகளில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply