- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப். 14-
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இந்த திட்டத்தை, சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

68-வது பிறந்தநாளையொட்டி

வருகிற 24-ந் தேதியன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வனத்துறையினரும், ஊரக வளர்ச்சித்துறையினரும் மேற்கொள்ள உள்ளனர். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இன்று காலை 11 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மரக்கன்றை நட்டு வைத்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

பாதுகாப்பு ஏற்பாடு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வருவதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசின் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. அசோக்குமார், போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave a Reply