- செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்

தமிழகம் முழுவதும் 1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.1½ லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்சென்னையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்கள் கூட்டமாக கூடுகிறார்கள். அங்கு வராத கொரோனா விநாயகர் சதுர்த்தி விழாவில் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சனிக்கிழமைகளில் இரவு வரை மீன்கடை, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். இதனை அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ கண்டு கொள்ளவில்லை.நாங்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சிலைகளை வைக்கிறோம் என்று கூறினாலும் இந்த அரசாங்கம் எங்களை புறக்கணிக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போதும் அங்கு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.எனவே வருகிற 22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட இருக்கிறோம். தமிழகம் முழுவதும் 1½ லட்சம் சிலைகள், கடந்த ஆண்டு எங்கெல்லாம் வைக்கப்பட்டதோ அங்கு எல்லாம் வைத்து வழிபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply