- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரூ.675 கோடியில் 43 பாலங்கள்

சென்னை, பிப்.15-
தமிழகம் முழுவதும் பல்ேவறு இடங்களில் ரூ. 675 கோடியே 42 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 43 பாலங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-–
ஸ்ரீரங்கத்தில் புதிய பாலம்
ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைக் கட்டமைப்பு வசதி மிகமுக்கிய பங்கினை வகிக்கிறது. சாலைக் கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தேவைக்கேற்ப மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், போன்ற பணிகளை முதல்–-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 75 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 792 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்–-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த புதிய பாலம் திறக்கப்படுவதால் நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், சென்னை போன்ற பகுதிகளிலிருந்து திருச்சிராப்பள்ளி மாநகருக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி அருகாமையில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வழிப்பாட்டுத்தலங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பயன் அடைவார்கள்.
சேலம் மாவட்டத்தில்…
மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வயலூர் அருகில் 105 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 வழித்தட பாலம், திருவண்ணாமலை மாவட்டம், கடுகனூரில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் பாப்பம்பாடியில் 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சரபங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஈரோடு மாவட்டம் அண்ணா நகரில் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், எல்.பி.பி.கால்வாய் மில்மேட்டில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எல்.பி.பி. கால்வாய் பெரியார் நகரில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பாலங்களையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ெரயில்வே மேம்பாலம்
இதேபோன்று தருமபுரி மாவட்டம், பேதாதம்பட்டியில் காட்டாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,  நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே 43 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம்.
கரூர் மாவட்டம் எழுநூத்திமங்கலத்தில், நொய்யல் ஆற்றின் குறுக்கே 2 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் நச்சலூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் தோளம்பாளையத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சொக்கனூரில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அணுகுசாலையுடன் கூடிய பாலம் மற்றும் ரத்தினபுரியில் 19 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ெரயில்வே மேம்பாலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஓடத்துறையில் 44 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ெரயில்வே மேம்பாலத்தையும் திறந்து வைத்தார்.
புறவழிச்சாலை
மேலும், திருவாரூர் மாவட்டம் சோளக்குறிச்சியில் நாட்டாற்றின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இணைப்பு பாலம், பேரையூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், விளத்தூரில் மல்லியனாற்றின் குறுக்கே 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் செட்டிசத்திரத்தில் 1 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நாகப்பட்டினம் மாவட்டம் சந்திரப்பாடியில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் ஓதவந்தான்குடியில் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தையும் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 188 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் துறைமுக இணைப்பு சாலை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 23 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள ராசிபுரம் புறவழிச்சாலை, சென்னை சைதாப்பேட்டையில் 38 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகக் கட்டிடம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் 25 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகக் கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ரூ.675 கோடியில் 43 பாலங்கள்
கள்ளக்குறிச்சியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு உட்கோட்ட அலுவலகம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டிடம், சேலம் மாவட்டம், தலைவாசலில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளள பயணியர் மாளிகை, என மொத்தம் 675 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 பாலங்களையும், 2 ெரயில்வே மேம்பாலங்களையும், 2 சாலைப் பணிகளையும், அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் பயணியர் மாளிகைகளையும் முதல்–-அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.
இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply