- கடலூர், செய்திகள், மாவட்டச்செய்திகள்

தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் சீமான் பேச்சு…

கூடலூர்,ஏப்.13-
தமிழகத்தை தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் என்று கூடலூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
பிரசார கூட்டம்
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், கூடலூர் அருகில் உள்ள பந்தலூர் பஜாரில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் சீமான் பேசுகையில், கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆண்ட கட்சிகளால் மக்களுக்கு பயன் ஏதும் இல்லை.
விரோதிகள்
தமிழக முதல்வர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். தி.மு.க. தலைவர் தெலுங்கு பேசுபவர். இவர்களால் தமிழகத்திற்கு எவ்வாறு நன்மை செய்ய முடியும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி புரிகிறார்கள். தமிழக மக்கள் தண்ணீருக்காக விரோதிகள் ஆக்கப்படுகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் பிரச்சினையே இருக்காது. இருகட்சியினரும் மக்களை ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள். இந்த ஆட்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டும். தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தை தமிழன்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply