- செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய கனமழை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.ஏனைய மாவட்டங்களில் லேசான மழையும், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply