- செய்திகள்

தமிழகத்தில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு 4 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்பிடித்து செயல்பாட்டுக்கு வந்ததும், மக்கள் ஓரளவிற்கு நிம்மதி அடைந்தனர். அதற்குள் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதனால் இங்கிலாந்து உடனான தொடர்பை மற்ற நாடுகள் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மற்ற நாடுகள் எச்சரிக்கையாக உள்ளன. இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. உருமாறிய கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் நான்கு பேர் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்

Leave a Reply