- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைவிபத்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்

சென்னை, மார்ச்.2-
சாலை விபத்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த 24 பேர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவல்துறை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த  தமிழ்செல்வன்,   நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த து.நேரு, திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராகப் பணி புரிந்த எஸ்.சாந்தி ராமர்முத்து, தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில்  காவலராக பணி புரிந்த சி.எஸ்.ராஜேந்திரன், தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த  ஏ.முருகானந்தம்.
சிறப்பு உதவி ஆய்வாளர்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர குற்றப் பதிவேடுகள் கூடத்தில்  தலைமைக் காவலராகப் பணி புரிந்த எம்.ஆதிமுத்து,  மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தங்கராஜ், சென்னை,  அருங்காட்சியகம் காவல் நிலையத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த எம்.முத்துகுமார், கோயம்புத்தூர் மாநகரம், குனியமுத்தூர் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்த எம்.மகேஸ்வரன், சென்னை பெருநகர காவல், நவீன காவல் கட்டுப்பாட்டறையில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ஏ.ஜோஸ், சேலம் மாவட்டம், மேட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த பி.தங்கராஜ், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வி.துரை ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.
சாலை விபத்துகளில்…
சேலம் மாநகர அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராகப்  பணி புரிந்த  ஜி.கண்ணன், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலையத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த எம்.வேணுகோபால், கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஆர்.குமாரராஜா, திருநெல்வேலி மாவட்டம்,  சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில்  சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த  எஸ்.ராஜகணபதி, சென்னை, பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில்  உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த ஜி.பாலசுப்பிரமணியம், சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம்,  அடைமதிப்பான் குளம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவரின் மகள் வள்ளியம்மாள், விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பையூர் கிராமத்தைச் சேர்ந்த கலிய பெருமாள் என்பவரின் மகன் பால்ராஜ், திருவள்ளூர் மாவட்டம், பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் என்பவரின் மகன் சுகுமார், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், சர்க்கரைகுளத் தெருவைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், நங்கநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடராஜி என்பவரின் மகன் அரிபிரசாத்ராஜி, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.கிருஷ்ணாபுரம் பிரிவு, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் களப்பணியாளராகப் பணிபுரிந்து வந்த செல்வராஜ் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
24 பேர் குடும்பங்களுக்கு நிதி
பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 24 நபர்களின் குடும்பங்களுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன்,  அன்னாரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
யானை தாக்கி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த சிக்குசிவனப்பா, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜப்பா, நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், தூனேரி கிராமம், நெல்லிமந்துவைச் சேர்ந்த ஆல்துரை, கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், தோலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர்  காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த பத்மா காட்டெருமை தாக்கியதில் உயிரிழந்தார்.
காட்டுயானை மற்றும் காட்டெருமை தாக்கி உயிரிழந்த இந்த 5 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு வனத்துறை மூலம் தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply