- செய்திகள், மாவட்டச்செய்திகள், வானிலை செய்திகள்

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை, ஜன. 20-
அரபிக் கடல் பகுதியில் நேற்று முன் தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்த வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்சம் 23 டிகிரியில் இருந்து அதிகபட்சம் 30 டிகிரி வரை வெப்பம் நிலவும்.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியாறு அணையில் 10 மி.மீ மழை பெய்தது. தமிழகத்தில் குறைந்தபட்சமாக தர்மபுரி மற்றும் திருப்பத்தூரில் 19 டிகிரி வெப்பம் நிலவியது.
மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply