- செய்திகள், வணிகம்

தபால் நிலையங்களில் 550 ஏ.டி.எம்.மையங்கள்

 

புதுடெல்லி, மார்ச், 7:-

நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாதம் வரை தபால்துறை சார்பில் இதுவரை 550 ஏ.டி.எம். ்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளது.

பட்ஜெட் அறிவிப்பின் போது பேசிய நிதிஅமைச்சர் ஜெட்லி, அடுத்த 3 ஆண்டுகளில் நாடுமுழுவதும் உள்ள தபால்நிலையங்களில் மைக்ரோ ஏ.டி.எம். மற்றும் ஏ.டி.எம். மையங்கள் அமைக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து இருந்தார். மேலும், 25 ஆயிரம் தபால்நிலையங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கி வசதியும் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் தபால்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஆயிரம் ஏ.டி.எம். மையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் பிப்ரவரி 24-ந்தேதி வரை நாடு முழுவதும் தபால்துறை சார்பில் 550 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply