- செய்திகள், வணிகம்

தடையை தகர்க்குமா காளை?

புதுடெல்லி, ஜன.18:-
கடந்த 2 வாரங்களாக பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் எப்படி இருக்கும் இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிப்பவை

சீன நிலவரம்

நிதி நிலை முடிவுகள்

பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

அன்னிய முதலீடு

சீன நிலவரம்

சீன பொருளாதார மந்த நிலை, யுவான் மதிப்பு குறைப்பு போன்றவை கடந்த வாரங்களில் இந்திய பங்குச் சந்தைகளை அதள பாதாளத்தில் தள்ளியது. இந்த நிலையில் நாளை (ஜனவரி 19) அந்நாட்டு அரசு கடந்த டிசம்பர் காலாண்டு, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளது. மேலும் அன்று அந்நாட்டின் சில்லரை விற்பனை, தொழிற் துறை உற்பத்தி, நிலையான சொத்து முதலீடு குறித்த புள்ளிவிவரங்களும் வெளிவருகிறது. உலகமே இதனை எதிர்பார்த்து உள்ளது. இவை சாதகமாக  இல்லையென்றால் சர்வதேச பங்குச் சந்தைகளுக்கு மற்ெறாரு கருப்பு தினமாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கிலியில் உள்ளனர்.

நிதி நிலை முடிவுகள்
சென்ற வாரம் முதல் நிறுவனங்களின் கடந்த டிசம்பர் காலாண்டு  நிதி நிலை முடிவுகள் வெளிவர தொடங்கி விட்டன. இந்த வாரத்தில்  கோடக் மகிந்திரா வங்கி, விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடியா செல்லுலார், கெய்ரன் இந்தியா, ஐ.டி.சி. ஆகிய முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் வெளிவர உள்ளது. இவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கும்.

பெட்ரோலிய கச்சா எண்ணெய்

உலக நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கான தேவை குறைவாக உள்ள நிலையில், சப்ளை அதிகமாக உள்ளதால் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்து வருகிறது. சென்ற வாரத்தில் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை  கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ந்தது. 1 பேரல் விலை 30 டாலருக்கும் கீழ் சென்றது. வரும் நாட்களிலும் இதன் விலை குறைந்தால் அது பங்கு வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. வரும் வாரத்தில் ரூபாயின் ஏற்ற இறக்கம் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதவிர அன்னிய முதலீட்டாளர்களின் நிலைப்பாடு போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும்.

Leave a Reply