- செய்திகள், வணிகம்

தங்க டெபாசிட் திட்டத்தில் பங்கேற்க தயார் ஆனால்…

புதுடெல்லி, டிச.21:-
மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டத்தில் பங்கேற்க பெரும்பான்மையான பணக்கார கோவில்கள் பங்கேற்ற ஆர்வமுடன் உள்ளன. அதேசமயம் இந்த திட்டத்தில் உள்ள விதிமுறைகளால் பல கோவில்கள் இதில் பங்கு கொள்வதில் தயங்குகின்றன.

22 ஆயிரம் டன்

நம் நாட்டு குடும்பங்கள், கோவில்களில் எந்தவித பலனும் இன்றி சுமார் 22 ஆயிரம் டன் தங்கம் முடங்கி கிடக்கிறது. அதேவேளையில் ஆண்டுக்கு ஆண்டு தங்கம் இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. தங்கம் இறக்குமதியால் அரசின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. எனவே தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும், உள்நாட்டில் பதுங்கி கிடக்கும் தங்கத்தை வெளியே கொண்டு வரும் எண்ணத்திலும் தங்க டெபாசிட் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

அறிமுகம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 5-ந் தேதி தங்க டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டத்தின்படி, முதலீடு செய்யப்படும் தங்கத்துக்கு மத்திய அரசு வட்டி வழங்கும். தங்கத்தை உருக்கி தரத்தை பரிசோதனை செய்த பிறகே அதன் மதிப்பு கணக்கிடப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து 1 மாதம் தாண்டியும் இதுவரை சுமார் 1 கிலோ அளவுக்கு தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தங்க பத்திர திட்டம் மக்களிடம் ெஜாலிக்க தவறியதால் மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆபத்பாந்தவனாக நம் நாட்டில் உள்ள பணக்கார கோவில்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க  ஆர்வம் காட்டின.

ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் குஜராத்  ஆகிய மாநிலங்களில் உள்ள சில முக்கிய கோவில்கள் இந்த திட்டத்தில் சேர தொடக்கத்தில் ஆர்வம் காட்டின. அதேவேளையில் கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றன.
காரணம்
தங்கத்தை உருக்குவதால் அதன் மதிப்பு குறையும் என்ற கவலை, பக்தர்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவது போல் இருக்கும் போன்ற காரணங்களால் பணக்கார கோவில்கள் இந்த திட்டத்தில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றன.

கோவிலில் இருந்து உருக்கும் மையங்களுக்கு தங்கத்தை கொண்டு செல்வதில் உள்ள பாதுகாப்பு பிரச்சினை, இதற்காக அதிக செலவிட வேண்டியது இருக்கும் போன்றவையும் கோவில்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய கோவில்கள் தயக்கம் காட்டுகின்றன என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

Leave a Reply