- செய்திகள், வணிகம்

தங்கம் விலை திடீர் ஏற்றம் பவுனுக்கு 128 ரூபாய் உயர்ந்தது

சென்னை, ஏப்.28:-

தங்கத்தின் விலை நேற்று திடீரென ஏற்றம் கண்டது. பவுனுக்கு 128 ரூபாய் உயர்ந்தது.

தேவை அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஒரு நாள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை உயர்ந்தது. தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 783 ரூபாயாக அதிகரித்தது. நேற்று முன்தினம் இது 2 ஆயிரத்து 767 ரூபாயாக இருந்தது. தங்கம் பவுனுக்கு 128 ரூபாய் ஏற்றம் கண்டு 22 ஆயிரத்து 264 ரூபாயாக அதிகரித்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இது 22 ஆயிரத்து 136 ரூபாயாக இருந்தது.

வெள்ளி

வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்தது. நேற்று வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 44 ரூபாய் 40 காசுகளாகவும், வெள்ளி கிலோவுக்கு 690 ரூபாய் அதிகரித்து 41 ஆயிரத்து 510 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

Leave a Reply