- செய்திகள், வணிகம்

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி பவுனுக்கு 144 ரூபாய் குறைந்தது

சென்னை, ஏப்.1:-

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக நிலையில்லாமல் உள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 144 ரூபாய் குறைந்தது.

ரூபாய் மதிப்பு

விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக உள்ளதால் தங்கத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். இதனால் தேவை சரிவடைந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 703 ரூபாயாக வீழ்ச்சி கண்டது. கடந்த புதன்கிழமையன்று இது 2 ஆயிரத்து 721 ரூபாயாக இருந்தது. பவுனுக்கு 144 ரூபாய் வீழ்ந்து 21 ஆயிரத்து 624 ரூபாயாக குறைந்தது. நேற்று முன்தினம் இது 21 ஆயிரத்து 768 ரூபாயாக இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி 39 ரூபாய் 20 காசுகளாக இருந்தது. வெள்ளி  கிலோவுக்கு 55 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 715 ரூபாயாக குறைந்தது.

Leave a Reply