- செய்திகள், வணிகம்

தங்கம் பவுனுக்கு 152 ரூபாய் உயர்ந்தது

 

சென்னை, மார்ச்.8:-
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. பவுனுக்கு ஒரே நாளில் 152 ரூபாய் அதிகரித்தது.
தேவை அதிகம்
கல்யாண சீசன் காரணமாக தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை  அதிகரித்துள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர், குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக தங்கத்தை ேசமித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருவது அவர்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 777 ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த சனிக்கிழமையன்று 2 ஆயிரத்து 758 ரூபாயாக இருந்தது. தங்கம் பவுனுக்கு 152 ரூபாய் ஏற்றம் கண்டு 22 ஆயிரத்து 216 ரூபாயாக உயர்ந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமையன்று 22 ஆயிரத்து 64 ரூபாயாக இருந்தது.
வெள்ளி
வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்தது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 40 காசுகள் உயர்ந்து 40 ரூபாய் 60 காசுகளாகவும், , கிலோவுக்கு ஆயிரத்து 275 ரூபாய் அதிகரித்து 37,915 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது.

Leave a Reply