- செய்திகள், வணிகம்

தங்கம் இறக்குமதி அதிகரிப்பு

 

தங்கம் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் 85 சதவீதம் அதிகரித்து 291 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2015 ஜனவரி மாதத்தில் 157 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. கடந்த டிசம்பரில் தங்கம் இறக்குமதி 2 மடங்குக்கு மேல் அதிகரித்து 380 கோடி டாலராக உயர்ந்தது. சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் பெரும் பகுதி ஆபரண துறைக்கு செல்கிறது.
இந்த நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி) 2,936 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் தங்கம் 2,742 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

Leave a Reply