- செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லி அரசையும் கவிழ்க்க சதி மோடி மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதுடெல்லி, மார்ச் 30-

டெல்லி அரசை கவிழ்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி சதித் திட்டம் தீட்டி வருவதாக, முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருக்கிறார்.

உத்தரகாண்ட்

அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இமாசல பிரதேசம் மற்றும் அசாம் மாநில அரசுகளை கலைக்க மத்திய அரசு முயன்றதாகவும், அந்த மாநில முதல்-அமைச்சர்கள் நேற்று முன்தினம் அறிவித்து இருந்தனர்.

டெல்லி அரசையும்

இந்த நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசையும் பிரதமர் மோடி கலைக்க முயற்சிப்பதாக, முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் நேற்று குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது-

‘‘டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக பெரிய தொழில் அதிபர் ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். ஆனால் ஒரு எம்.எல்.ஏ.வைக்கூட அவர்களால் வாங்க முடியாது’’.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Leave a Reply