- செய்திகள், மாநிலச்செய்திகள்

டெல்லியில் 5-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா?

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை 4 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே 5-ம ்தேதி 5-ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி நேற்ரு டெல்லி விக்யான் பவனில் பேச்சுவார்த்தை தொடங்கியது. வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமை தாங்கினார். இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை விவசாய சங்க தலைவர்களிடம் மத்திய அரசு சார்பில் விளக்கி கூறினர்.

வேளாண் சட்டத்தில் விவசாயிகளை திருப்திப்படுத்தும் வகையில் திருத்தங்களை செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை விவசாய சங்க தலைவர்கள் ஏற்க தயாராக இல்லை. 3 சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

Leave a Reply