- செய்திகள், விளையாட்டு

டெல்லியில் தேசிய சப்-ஜூனியர் கால்பந்து

 

டெல்லி, ஏப்.5:-
37-வது தேசிய சப்-ஜூனியர் கால்பந்துப் போட்டி டெல்லியில்  வரும் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அம்பேத்கர் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்தப் போட்டியின் ஏ பிரிவில் தமிழ்நாடு, டெல்லி, மேகாலயம், ஒடிசா, கோவா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. பி பிரிவில் கேரளம், அசாம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

10-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் டெல்லி-தமிழ்நாடு அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் மேகாலயம்-கோவா அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும். இதையடுத்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இறுதிப் போட்டி ஏப்ரல் 23-ம் தேதி நடக்கிறது.

போட்டியில் பங்கேற்க உள்ள அணிகள் வரும் 7-ம் தேதி தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.அப்போது போட்டியில் விளையாடும் வீரர், வீராங்கனைகளின் வயதை உறுதி செய்வதற்காக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சோதனையை அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் இணைந்து போட்டி அமைப்புக் குழு மேற்கொள்ள உள்ளது.

இதற்காக டெல்லி கால்பந்து சம்மேளனம் என்.கே. பாட்டியா தலைமையில் போட்டி அமைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

Leave a Reply