- செய்திகள்

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் விலகல் ரியோ ஒலிம்பிக்…

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 28:-

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். 34 வயதான பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 2008ல் தங்கம் (இரட்டையர் பிரிவு), 2012ல் வெள்ளி (ஒற்றையர்) என இரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். அத்தோடு மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது முக நூலில் இந்த தகவலை  வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மீண்டும் முழு வலிமை பெற்று ஆரோக்கியத்துடன் 2017-ம் ஆண்டில்  நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்பேன் என்றும்  பெடரர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply