- செய்திகள், விளையாட்டு

டூப்பிளசி விளாசலில் புனே அணி 163 ரன்கள் சேர்ப்பு

 

ராஜ்கோட், ஏப். 15:-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. அந்த அணி வீரர் டூப்பிளசிஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

ராஜ்கோட் சவுராஸ்டிரா மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் நடந்தது. டாஸ் வென்ற புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தலைவர் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ராகானே-டூப்பிளசி ஆட்டத்தைத் தொடங்கினர். ஒருபுறம் டூப்பிளசி நிதானம் காட்ட, மறுபுறம் ராகானே அதிரடி ஆட்டத்தைக் கையாண்டார். புவனேஷ்குமார், ஜகாதி ஓவரில் பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை வேகப்படுத்தினார்.

ஸ்கோர் 27 ரன்களை எட்டியபோது, ரகானே 21 ரன்னில்(17பந்து, 4பவுண்டரி) தாம்பே பந்துவீச்சில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு வந்த பீட்டர்சன், டூப்பிளசியுடன் இணைந்தார். இருவரும் புனே அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினர். இதனால், ஸ்கோர் 5 ஓவரில் 50 ரன்களையும், 11-வது ஓவரில் 100 ரன்களையும் எட்டியது.

அதிரடியாக ஆடிய டூப்பிளசி 33 பந்துகளில் அரைசதம் எட்டினார். நிதானமாக பேட் செய்து வந்த பீட்டர்சன் 37 ரன்னில்(2பவுண்டரி, ஒருசிக்சர்)பிராவோ வேகத்தில் ‘க்ளீன்’ போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 86 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சிறிது நேரத்தில் டூப்பிளசி 69ரன்னில்(43 பந்து, 5 பவுண்டரி,4 சிக்சர்)தாம்பேயிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை பின்னால் களம்இறங்கிய பயன்படுத்தவில்லை.

ஸ்மித்(5), மார்ஷ்(7) என பொறுப்பில்லாமல் ஆடி ஜடேஜா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். 6-வது விக்கெட்டுக்கு தோனி, பாட்டியா கூட்டணி சேர்ந்தனர்.  அதிரடியாக ஆடி தோனி 21 ரன்கள்(10பந்து, 2பவுண்டரி, ஒருசிக்சர்) சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில்புனே அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

குஜராத் லயன்ஸ் தரப்பில் ரவிந்திரஜடேஜா, தாம்பே தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

Leave a Reply