- செய்திகள், விளையாட்டு

டி20 உலக்கோப்பை வெல்வது குறித்து கணிப்பு இந்தியாவுக்குத்தான் ‘கெத்து’ இருக்கு

மும்பை, மார்ச் 10:-

டி20 உலகக்கோப்பையை வெல்லும்  திறமை, வாய்ப்பு உள்ளிட்ட கெத்து இந்தியாவுக்குதான் அதிகம் இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் எயின் மோர்கன் கணித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி மும்பை வந்துள்ளது. கேப்டன் மோர்கன் மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உள்நாட்டில் போட்டி நடப்பது, ஆடுகளத்தை நன்றாக அறிந்து இருப்பது, காலநிலை, ரசிகர்கள் ஆதரவு ஆகியவை இந்திய அணிக்கு சாதகமான விஷயங்கள்.  அவர்கள் சமீக காலமாக டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி பல தொடர்களை வென்று சிறந்த பார்மில் இருக்கிறார்கள். மற்ற அணிகளுக்கு கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு இருந்தாலும், இந்திய அணிக்குத்தான் அதிக அளவில் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.

எங்கள் அணியைப் பொருத்தவரை மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். தென் ஆப்பிரிக்கத் தொடரில் தொடரை வெல்லாத நிலையிலும், எங்களின் ஒவ்வொரு ஆட்டமும் அந்த அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இருந்தது. பெரும்பாலான ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் அடித்தோம். டி20 போட்டியிலும் சிறப்பாக விளையாடினோம். ஆதலால், இந்த தொடரிலும்  எங்கள் முழுத்திறமையுடன், ஆவேசத்துடன் விளையாடி எதிரணியை திணறடிப்போம்.

கேப்டன் என்ற முறையில் முதல்முறையாக வந்துள்ள எனக்கு இது கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பாகும். அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின் காயத்தால் இடம் பெறாதது பெரிய குறைதான். ஆனால், அதை நிரப்ப பிளங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார். பெரும்பாலான வீரர்கள் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ளனர்.  ஆதலால் இது வித்தியாசமான பயணமாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply