- செய்திகள், விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஜிம்பாப்வேவுக்கு முதல் வெற்றி

நாக்பூர், மார்ச் 9:-

6-வது டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான பி பிரிவில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாங்காங் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஜிம்பாப்வே அணி.

6-வது டி20 உலகக்கோப்பைப் போட்டி தகுதிச்சுற்று ஆட்டத்துடன் நேற்று நாக்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது. 13ந்தேதி வரை நடக்கும் தகுதிச்சுற்று ஆட்டத்தில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ஏ பிரிவில் 4 அணிகளும், பி பிரிவில் 4 அணிகளும் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் புள்ளியின் அடிப்படையில் முதலிடம் பெறும் அணிகள் சூப்பர்-8 சுற்றில் பங்கேற்கும்.

நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் தன்வீர் அப்சல் தலைமையிலான ஹாங்காங் அணியை எதிர்த்து மசகாட்சா தலைமையிலான ஜிம்பாப்வே அணி மோதியது. போட்டி தொடங்கும் முன்பாக, இரு அணிவீரர்களையும் சிறுவர்கள் கைபிடித்து அழைத்து வந்தனர். இருநாட்டு தேசியகீதமும், நம்நாட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

டாஸ்வென்ற ஹாங்காங் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிபான்டா மட்டுமே சிறப்பாக ஆடி 58 ரன்கள்சேர்த்தார். அதிரடியாக பேட்செய்த சிகும்புரா 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹாங்காங் தரப்பில் தன்வீர், அப்சல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் இறங்கிய ஹாங்காங் அணி , 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டும் சேர்த்து 14 ரன்களில் போராடித் தோல்விஅடைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேமி அட்கின்சன் சிறப்பாக பேட் செய்து 44 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதிவரை போராடிய கேப்டன் அப்சல் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் சடாரா, திரிபானோ தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்த வெற்றியையடுத்து ஜிம்பாப்வே அணி 2 புள்ளிகள் தரப்பட்டுள்ளது.10-ந்தேதி நாக்பூரில் நடக்கும் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது ஜிம்பாப்வே.

Leave a Reply