- செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்கள் 450 பேர் திடீர் பணியிட மாற்றம்

மதுக்கடைகளை அடைத்து 2 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.450 ஊழியர்கள் பணியிட மாற்றம் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், கொரோனா பாதித்து உயிரிழந்த ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று முன் தினம் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் 2 மணிநேரம் மதுக்கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 450 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் உட்பட தமிழகத்தில் 450 பேர் குடோன்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply