- சினிமா, செய்திகள்

டார்லிங்-2 விமர்சனம்

ஆவிப்பட வரிசையில் இன்னொரு பேய்ப்படம்.

ஐந்து நண்பர்களில் ஒருவனுக்கு திருமணம் நிச்சயமாக, அதைக் கொண்டாட வால்பாறைக்கு டூர் போகிறார்கள், நண்பர்கள். போனஇடத்தில் மாப்பிள்ளையாகப் போகிற அரவிந்தனை ராமின் ஆவி பிடிக்கிறது. அந்த ராம் வேறு யாருமல்ல. இந்த ஐவர் கூட்டணி அப்போது அவனோடு அறுவர் கூட்டணியாக இருந்தது. அரவிந்தனை தற்கொலை செய்துகொண்ட ராமின்ஆவி ஏன் பிடிக்க வேண்டும்?  ஆவி நண்பனிடம் இருந்து அவனால் விடுபட முடிந்ததா என்பதை ஆவி பொங்கும் சூடான காபியாக தந்திருக்கிறார்கள்.

நண்பர்களில் கலையரசனுக்கு நடிக்க அதிக வாய்ப்பு. பேயாகவும் நண்பனாகவும் மாறிமாறிப் பேசுகிற இடத்தில் தேர்ந்த நடிப்பு. காளிவெங்கட்டும் வால்பாறை வரதனாக வரும் முனீஸ்காந்த்தும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள். பேய் பயத்தில் உருளைக்கிழங்கு சிப்சை ஊற வைத்து நண்பர்கள் சாப்பிடும் இடம் பயத்தையும் தாண்டி சிரிக்க வைக்கிறது.

வால்பாறைக்கு நண்பர்கள் போனதும் இறந்து போன ராமின் காதலி மாயா வரவேற்பதும் உபசரிப்பதும் என்னவோ நடக்கப் போகிறது என்ற பயத்தை இதயத்துக்குள் உற்பத்தி செய்து விடுகிறது. அவளும் ஆவி என்று அறிய வரும் இடமும் அந்த தற்கொலை பிளாஷ்பேக்கும் உருக்கம்.

விஜய்கண்ணன் ஒளிப்பதிவில் திகிலான வால்பாறை இரவுக் காட்சிகள் அற்புதம். ரதன் இசையில் `சொல்லட்டுமா' பாடல் மீண்டும் கேட்கத் தூண்டும். ஆவி நண்பனுக்காக கலையரசன் உயிர் விடத் துணியும் கிளைமாக்ஸ் மட்டுமே சதீஷ்சந்திரசேகரன் இயக்கத்தை தூக்கிப் பிடிக்கிறது.

Leave a Reply