- செய்திகள், வணிகம்

டாப் 10 புளூசிப் நிறுவனங்கள் பட்டியலில் டி.சி.எஸ். பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடி உயர்ந்தது

புதுடெல்லி, மே 16:-

மும்பை பங்குச் சந்தையில் சென்ற வாரத்தில் டாப் 10 புளூசிப் நிறுவனங்கள்   பட்டியலில் ரிலையன்ஸ், இன்போசிஸ் உள்பட 5 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம்   ரூ.25,389  கோடி உயர்ந்தது. இதில், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின்  சந்தை மதிப்பு அதிக அளவாக சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகரித்தது. அதே  வேளையில், சன்பார்மா, கோல் இந்தியா உள்பட 5  நிறுவன பங்குகளின் சந்தை  மதிப்பு மொத்தம் ரூ.11 ஆயிரம் கோடி குறைந்தது.

நிறுவனம்                                    சந்தை மதிப்பு

1        டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்        ரூ.4,97,218 கோடி

2       ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்               ரூ.3,16,998 கோடி

3       எச்.டி.எப்.சி. வங்கி                             ரூ.2,88,371 கோடி

4       இன்போசிஸ்                                   ரூ.2,77,172 கோடி

5        ஐ.டி.சி.                      ரூ.2,56,947  கோடி

6       சன் பார்மா                             ரூ.1,91,332 கோடி

7        எச்.டி.எப்.சி. நிறுவனம்                           ரூ.1,84,217 கோடி

8        இந்துஸ்தான் யூனிலீவர்                             ரூ.1,79,845 கோடி

9        கோல் இந்தியா                     ரூ.1,77,806 கோடி

10      ஓ.என்.ஜி.சி.                      ரூ.1,74,660 கோடி

Leave a Reply