- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து ஈஸ்டர் பண்டிகை

சென்னை, மார்ச்.27-

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க.இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்று நாளில் உயிர்த்தெழுந்து விட்டார். தமிழகத்தில் மக்கள் நலனும், நல்லாட்சியும் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் உயிர்த்தெழத் தொடங்கியிருக்கின்றன. ஏசு உயிர்த்தெழுந்த போது உலகம் எப்படி மகிழ்ச்சியில் திளைத்ததோ அதேபோல் இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் மக்கள் நலனும், நல்லாட்சியும் உயிர்த்தெழும் போது தமிழக மக்கள் மகிழ்ச்சியில் மலரப்போவது உறுதி.

ஏசு பிரான் உயிர்த்தெழுவதற்காக உலகமே காத்திருந்ததைப் போல தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அத்தகைய மாற்றம் நடக்கப்போவது உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் ஏசு பிரான் போதித்தவாறு அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும், பசித்தவருக்கு உணவு செலுத்தவும் இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

Leave a Reply