- செய்திகள், மகளிர்

ஞாபகம் வரலையே… ஞாபகம் வரலையே

உபயோகமான உரையாடல்
‘‘உங்க அப்பாவை காணோம். எங்க போயிருக்கார் ராதா?’’
‘‘கோயிலுக்கு போயிட்டுவர்றேன்னு சொல்லிட்டு போயிருக்கார் ராணி’’
‘‘கூட யாராவது போயிருக்காங்களா?’’
‘‘இல்லை. தனியா தான் போயிருக்கார்’’
‘‘என்னடி இது.  வயசானவங்களை வெளியில் தனியா விடக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?  கிட்டத்தட்ட 80 வயசாகிறதே. சுகர் வேற இருக்கு’’
‘‘அதனால பயம் இல்லை ராணி. ஹெல்த்தியாதான் இருக்காரு’’
‘‘தப்பு ராணி.  போன மாசம் மதுரையில 70-வயசான தன் சின்ன மாமனாரைக் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க மகனும், மருமகளும். வழியில ஒரு ஹோட்டல் நுழைஞ்சு டிபன் ஆர்டர் பண்ணிருக்காங்க. திடீர்னு மாமனாரை காணும்.  எல்லா இடத்துலயும் தேடி, ஓய்ஞ்சு போய், வீட்டுக்கு வந்தா அவரை ரெண்டு பேர் கூட்டிட்டு வந்திருக்காங்க.  பஸ் ஸ்டாண்டுல நின்னுட்டிருந்தாரு. பேரு, அட்ரஸ் கேட்டா சொல்லத் தெரியலை.  அங்க ஒருவர் இவரை தெரியும்னு சொன்னதால இங்க கூட்டிட்டு வந்தோம்’னு சொன்னாங்க.  அதுக்குப் பிறகும் 2 முறை காணாம போய் கிடைச்சிருக்காரு.  ஒரு ஜீரியாட்ரிக் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனா, அவர், உங்க அப்பாவுக்கு தர்காலிக மறதி.  அம்னீஷியா (Amnesia).  இதை அப்படியே விட்டீங்கன்னா டிமென்ஷியால கொண்டு விட்டுட்டும்னு சொல்லிருக்கார்’’
‘‘இப்ப  எப்படியிருக்கார்?’’
‘‘வாக்கிங், நினைவாற்றலை பெருக்கறதுக்கான விளையாடு, நடைப் பயிற்சி, தியானம், ஹெல்த்தி ஃபுட்னு நல்லா கவனிச்சுக்கறாங்க.  ஆனா, வெளியில் எங்கயும் தனியா அனுப்பறதில்லை.  இப்பல்லாம் வயசானவங்களுக்கு அம்னீஷியா அதிகரிச்சிட்டே இருக்காம்.  சில மணி நேரம் இருக்கும் இந்த மறதி. சர்க்கரை நோயாளிக்கு தீடீர்னு சுகர் அதிகரிச்சாலோ, மூளைக்கு போற ரத்த ஓட்டம் குறைஞ்சாலோ, கண் பார்வை குறைபாடு, உப்பின் அளவு குறைஞ்சாலோ திடீர் மறதி ஏற்படலாம்.  கூடவே அதிகமா போன் பேசிட்டிருந்தாக்கூட மறதி வர்ற வாய்ப்பு அதிகமா இருக்காம். அதனால தான் சொல்றேன்’’
‘‘இனிமே ஜாக்கிரதையா இருக்கேன் ராணி… என்ற ராதா, உடனே அப்பா போன கோயிலுக்கு ஓடினாள்’’
மறுவாரமே ஃபிளாட்டின் நோட்டீஸ் போர்டில் ராணியின் இன்று ஒரு தகவல் பொரிக்கப்பட்டுவிட்டது.  அது…
‘‘எல்லாருக்கும் நான் சொல்லிக்கறது இதுதான்.  இனிமே, வயசானவங்களை யாரும் தனியா வெளியே அனுப்பாதீங்க.  நீங்கள் இல்லாதப்ப, அவர் வெளியில் சென்றாலும், பத்திரமா வீடு திரும்ப… அவரோட குடும்பத்தினர் செய்ய வேண்டிய முதல் வேலை. முதியவரோட பெயர், முகவரி, ரத்த வகை, தொடர்பு கொள்ளவேண்டிய நம்பர், ஃபேமிலி டாக்டர் எண், அவருக்கு ஏதேனும் நோய், பிரச்னை இருந்தால் அது பற்றிய தகவல்களை விரிவா எழுதி எப்பவும் அவரோட சட்டை பாக்கெட்டுல வைச்சிடுங்க… ப்ளீஸ்..’’

Leave a Reply