- செய்திகள், வணிகம்

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் கச்சா உருக்கு உற்பத்தி சரிவு

 

ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் 9.27 லட்சம் டன் கச்சா உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 17.23 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் கச்சா உருக்கு உற்பத்தி 11.20 லட்சம் டன்னாக இருந்தது. விஜயா நகர், டால்வி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள 3 ஆலைகள் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டதே உற்பத்தி சரிவுக்கு முக்கிய காரணம். இந்த மாதத்தில் மீண்டும் அந்த ஆலைகளில் உற்பத்தி பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக மும்பை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply