- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர் தே.மு.தி.க., பா.ம.க., புதிய தமிழகம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்

சென்னை, பிப்.26-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான, தே.மு.தி.க.வை சேர்ந்த 8 பேர்களும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரும், புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் என 10 பேர், நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க.தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
அ.தி.மு.க.பொதுச்செயலாளர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, நேற்று(வியாழக்கிழமை), தே.மு.தி.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான மதுரை மையம் தொகுதி ஆர். சுந்தர்ராஜன், திட்டக்குடி தொகுதி கே. தமிழ்அழகன், பேராவூரணி தொகுதி நடிகர் சி.அருண்பாண்டியன், ராதாபுரம் தொகுதி மைக்கேல் எஸ். ராயப்பன், செங்கம் தொகுதி. டி.சுரேஷ்குமார், சேந்தமங்கலம் தொகுதி சாந்தி ராஜமாணிக்கம், விருதுநகர் தொகுதி க. பாண்டியராஜன், திருத்தணி தொகுதி மு. அருண் சுப்பிரமணியம். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அணைக்கட்டு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மா. கலையரசு; புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ராமசாமி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
நன்றி
தாயுள்ளத்தோடு தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க.பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாறு அ.தி.மு.க.தலைமைக் கழக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply