- செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

திருப்போரூர்,பிப்.16-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அமைச்சர் சின்னையா, மரகதம் குமரவேல் எம்.பி., மாவட்ட செயலாளர் தண்டரை கே.மனோகரன் எம்.எல்.ஏ.,  ஆகியோர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
தங்கத்தேர் இழுப்பு
காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் தண்டரை கே.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில், பிரசித்தி பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் சின்னையா, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் தண்டரை கே.மனோகரன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், எம்.எல்.ஏக்கள் மதுராந்தகம் எஸ்.கணிதா சம்பத், செய்யூர் வி.எஸ்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டு, தங்கத் தேரை இழுத்து வழிபட்டனர்.

Leave a Reply