- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஜெயலலிதா இரங்கல்

சென்னை, பிப்.14-
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் எம்.சங்கரன், ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் இ.காந்திமதி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், ஆவடி நகர சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் ஜே.ஜே.ஜமால் ஆகியோர் மரணம் அடைந்துவிட்னர் என்ற செய்திகேட்டு வருத்தமுற்றேன்.
சங்கரன், காந்திமதி மற்றும் ஜமால் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணம் அடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply