- செய்திகள்

ஜெயலலிதா இரங்கல்…

 

சென்னை, ஜூலை.30-
அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டக்கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.ரத்தினசபாபதியின் சகோதரரும், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவருமான இ.ஏ.சின்னகருப்பன் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
சகோதரரை இழந்துவாடும் ரத்தினசபாபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்ெ காள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

Leave a Reply