- செய்திகள், வணிகம்

ஜெனரல் மோட்டார்ஸ் அறிவிப்பு ஒரு லட்சம் ‘பீட்’ கார்கள் வாபஸ்

புதுடெல்லி, டிச. 16:-

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்  பீட் டீசல் ரகத்தில் ஒரு லட்சம் கார்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

2010-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2014-ம் ஆண்டு ஜூலை வரை உற்பத்தி செய்த கார்களில் ‘கிளட்ச் லிவர் பெடலில்’ கோளாறு ஏற்படுவதாக வாடிக்கையாளர்களிடத்தில் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த இடைப்பட்ட ஆண்டுகளில் உற்பத்தி செய்ய ஒரு லட்சம் பீட் மாடல் கார்களை சோதனையிட்டு, கிளட்ச் லிவர் பெடலை மாற்றித்தர இருக்கிறது.

இதற்காக பீட்மாடல் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு தங்களின் சேவை மையத்தின் மூலம், குறைபாட்டை சரி செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதார அறிக்கை வெளியிட்டுள்ளது.

Leave a Reply