‘ஜீவி’ நாயகனின் அடுத்த படம்

கதா நாயகனாக வெற்றி நடித்த ‘‘ஜீ வி‘‘ படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவ்வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல படங்களின் வாய்ப்பு வந்தது.
இப்போது அவர் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தை ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கிறார். கதை திரைகதை எழுதி குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இப்படம் சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது.. வெற்றி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார்.
வசனத்தை சி.முருகேஷ்பாபு எழுத படதொகுப்பை ராஜாமுகமதும், சண்டைப்பயிற்சியை சுதேசும்,கலை இயக்கத்தை எஸ்.பத்மநாபனும் கவனிக்க எஸ். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் தொடங்கியது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *