- செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் 5 நாள் பிரசாரம்…

 

சென்னை, ஏப்.23-
மக்கள் நலக்கூட்டணி-தே.மு.தி.க. மற்றும் தா.மா.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தமது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்கான முதல் கட்ட பிரசாரத்தை நாளை (24-ந் தேதி) தொடங்கி 28-ந் தேதி முடிக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு மதுரவாயல் தொகுதியிலுள்ள நொளம்பூர், போரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இதையடுத்து விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
நாளை மறுநாள் (25-ந் தேதி) சிதம்பரம், 26-ந் தேதி கடலூர் மாவட்டம், 27-ந் தேதி விழுப்புரம், விக்கிரவாண்டி, 28-ந் தேதி சென்னையில் பெரம்பூர், திரு.வி.க.நகர் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மேற்கண்ட தகவல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply