- செய்திகள், விளையாட்டு

ஜிம்பாப்வே தொடரை உறுதிசெய்தது பி.சி.சி.ஐ ஜூன் 11 முதல் 22 வரை

புதுடெல்லி, மே 5:-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்( பி.சி.சி.ஐ. ) வௌியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை ஜிம்பாப்வே நாட்டுக்கு 12 நாட்கள் பயணம் மேற்கொள்கிறது. அந்நாட்டு அணியுடன், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் பேசி உறுதி செய்துள்ளோம். அனைத்துப் போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடக்கின்றன'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ரகானே தலைமையில் ஜிம்பாப்வே பயணம் சென்றிருந்த இந்திய அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. டி20 தொடர் 1-1 என்று சமன்செய்தது. கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணி 4-வது முறையாக ஜிம்பாப்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறது.

Leave a Reply