- செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்துவதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்…

சென்னை,ஆக.17-

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சட்ட சிக்கல்கள்
தமிழகத்தில் நம் தமிழர் பண்பாட்டோடு கூடிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கொண்டு வருவதில் தமிழக பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டோடு தான் பொங்கல் நடைபெற வேண்டும் என்று தீவிர முயற்சியினை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் இதற்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட சட்ட சிக்கல்களினாலும், உச்சநீதிமன்ற வழக்கினாலும் அது நடைபெறாமல் போய் விட்டது.

ஆனால் இந்த ஆண்டு அந்த சிக்கல்கள் எல்லாம் மீறி ஜல்லிக்கட்டு நடப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கேற்ப சட்ட அமைச்சகம் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

உறுதி

ஜல்லிக்கட்டு பண்பாட்டோடு கூடிய ஒரு வீர விளையாட்டு. அது தமிழர் பண்பாட்டோடு கூடியது. அது நிச்சயம் இந்த ஆண்டு நடைபெற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க உறுதியாக உள்ளது. அகில பாரத கட்சிகளும் இந்த வீர விளையாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவையும் தெரிவித்துள்ளது.
மத்திய பா.ஜ.கவும், தமிழக பா.ஜ.க.வும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்திற்கும் உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply