- செய்திகள்

சோழவந்தான் அருகே பயங்கரம் கூலித்தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை குடிபோதையில் உறவினர் வெறிச்செயல்…

மதுரை, ஆக. 29- சோழவந்தான் அருகே கூலி தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.

தகராறு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது உறவினர் கண்ணன் (35). இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு பேசி கொண்டிருந்தனர். அப்போது கண்ணன் குடிபோதையில் இருந்துள்ளார். திடீரென 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளவரசனை சரமாரியாக வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இளவரசன் பரிதாபமாக இறந்தார்.

வலைவீச்சு

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை தேடி வருகின்றனர். இறந்துபோன இளவரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Leave a Reply