- உலகச்செய்திகள், செய்திகள்

சோலார் இம்பல்ஸ்’ விமானம் கலிபோர்னியா சென்றது பசிபிக் பெருங்கடல், கோல்டன் கேட்டை கடந்து

‘சான்பிரான்சிஸ்கோ, ஏப். 25:-

முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் ‘சோலார் இம்பல்ஸ்’ விமானம் பசிபிக் பெருங்கடலைக் கடந்து, 56 மணி நேர நீண்ட பயணத்துக்கு பின், அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு நேற்று சென்றது.

சூரிய ஒளி

ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் முழுவதும் சூரியசக்தியால் இயங்கும் ‘சோலார்
இம்பல்ஸ்’ எனும் விமானம் தயாரிக்கப்பட்டது.

236 அடி நீளம் கொண்ட இந்த விமானத்தின் இறக்கையில் 17 ஆயிரம் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் சூரியஆற்றல் மின் ஆற்றலாக விமானத்தில் உள்ள பேட்டரியில் சேமிக்கப்பட்டு, விமானம் இரவிலும், பகலிலும் இயக்கப்படுகிறது.

சூழல் பாதுகாப்பு

உலகச் சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சோலார் இம்பல்ஸ் விமானத்தில்  விமானிகள் ஆன்ட்ரோ போர்ஸ்பெர்க், மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் மட்டுமே பயணிக்கிறார்கள்.

இதுவரை அபுதாபி, ஓமன், மியான்மர், சீனா, இந்தியா(அகமதாபாத்) , ஜப்பான்,  ஹவாய் தீவுக்கு அந்த விமானம் சென்றது.

56 மணி நேரம்

பேட்டரியில் ஏற்பட்ட பழுது, இறக்கையில ஏற்பட்ட கோளாறு ஆகியவற்றை சரி செய்ய கடந்த 8 மாதங்களாக ஹவாயில் இருந்து வெள்ளிக்கிழமை காலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கு  புறப்பட்டது.

மிகவும் ஆபத்தான, காற்று சுழன்று வீசக்கூடிய பசிப்பெருங்கடல் பகுதியில் ஏற்குறைய 56 மணிநேரங்கள் பயணம் செய்து, சான்பிரான்சஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தை கடந்து கலிபோர்னியாவுக்கு நேற்று சென்றது.

கோல் கேட் பாலம்

இது குறித்து  விமானி பிக்கார்ட் கூறுகையில், “ பசிபிக் பெருங்கடலை வெற்றிகரமாகக் கடந்து, இப்போது அமெரிக்காவுக்குள் வந்துவிட்டேன். குறிப்பாக சான்பிராஸ்கோவில் உள்ள தி கோல்டன் கேட் பாலத்தை  ஒரு சோலார் விமானம் மூலம் பறந்து கடப்பது என்பதை நினைத்துப்பார்க்க முடியுமா?.

இதற்கு முன்பு கப்பல்கள் மட்டுமே கடந்திருக்கின்றன. ஆனால், இந்த விமானம் ஒலி மாசு இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் பறந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

Leave a Reply