- செய்திகள், மகளிர்

சோதனையாகிப் போன ஸ்கேன்

உபயோகமான உரையாடல்
‘‘என்னம்மா எப்படியிருக்க?  இது எத்தனாவது மாசம்?  ஒழுங்கா… செக்கப் போறியா?’’
‘‘இது எனக்கு 5-வது மாசம் ஆன்ட்டி. ஸ்கேன் பண்ண சொல்லியிருக்காங்க.  அம்மா என்னை கூட்டிட்டு போறதா சொன்னாங்க.  அதான் வந்தேன்.  சாப்பிட்டு வந்திடறேன்’’ என்றபடியே வீட்டுக்குள் உள்ளே போக,
‘‘சரி… எந்த ஸ்கேன் சென்டர் போகப் போற? தரமான, நம்பகமான ஸ்கேன் சென்டரா பார்த்துப்போ. தப்பு தப்பா சொல்லி பீதியை கிளப்பிடுவாங்க’’
‘‘என்ன சொல்ற… ஸ்கேன்ல கூட மோசடி இருக்கா என்ன?’’
‘‘போன மாசம் என் அக்கா மக மூழ்காம இருக்காளேன்னு சேலம் போய் பார்த்திட்டு வந்தேன். 5  மாச கர்ப்பிணி.  ஒரு ஸ்கேன் சென்டர்ல ஸ்கேன் பண்ணியிருக்கா. அவங்க கொடுத்த ரிப்போர்ட்டை பார்த்திட்டு, டாக்டர், வயித்துல இருக்குற குழந்தையோட இதயத்துல ஓட்டை இருக்குன்னு சொல்லிட்டாரு  ஒட்டுமொத்த குடும்பமுமே உடைஞ்சு போயிடுச்சு. அந்தக் குழந்தை பிறந்தாலும்  காலம் முழுக்கப் பிரச்னைதான்னு அதை கலைக்கவே முடிவு பண்ணிட்டாங்க. அக்கா மக கதறி அழுதபடியே, ‘‘குழந்தையை கலைக்கவே முடியாது. அது எப்படி பிறந்தாலும் நான் பார்த்துக்கறேன்.  என் குழந்தை எனக்கு வேணும்’னு ஸ்ட்ராங்க சொல்லிட்டா.  உடனே, வேறு ஒரு டாக்டர்கிட்ட போய் காட்டியிருக்காங்க.  ஸ்கேன் ரிப்போர்டை பார்த்த அந்த டாக்டர், ‘திரும்பவும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்திடலாம்’னு சொல்லியிருக்கார். அந்த டாக்டர் எழுதிக் கொடுத்த ஸ்கேன் சென்டருக்கு போய் ஸ்கேன் எடுத்திட்டு வந்தாங்க.  ரிப்போர்ட்டை பார்த்த டாக்டர், ‘குழந்தை நார்மலா இருக்கு.  கவலையே படாதீங்க. எந்த பிரச்னையும் இல்லை  – னு சொல்லியிருக்கார். எல்லாருக்கும், உயிர் போய் உயிர் வந்தது. அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்ல முடியாது.
‘‘குழந்தையை கருவிலேயே அழிக்கப்பட்டிருந்தா… நினைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கே ராணி.  செகண்ட் டைம் ஸ்கேன் பண்ணதால தெரிஞ்சது. இல்லேன்னா?  உன் அக்கா மகளை நெனச்சா பெருமையா இருக்கு.  எப்படிப்பட்ட பெண் அவ. நிஜமான தாய். இந்த ஸ்கேன் செண்டருக்குதான் எத்தனை அலட்சியம்.  தப்பா ரிப்போர்ட் கொடுத்த அந்த ஸ்கேன் சென்டரை சும்மா விடக்கூடாது ராணி’’
‘‘பிறவிலேயே இதய கோளாறு வர்றதுக்கு, உறவு முறைல கல்யாணம் பண்றது, குரோமோசோம் குறைபாடுன்னு நிறைய காரணங்கள் இருக்காம். ஆனா, இதுதான் காரணம்னு குறிப்பிட்டு சொல்லமுடியாது.  கர்ப்ப காலத்துல, 5 லிருந்து 6-வது மாசத்துலேயே கருக் குழந்தையின் இதயக் கோளாறை ‘எக்கோ‘ டெஸ்ட் எடுத்து கண்டுபிடிச்சு, சரி செஞ்சிடமுடியுமாம். குழந்தையோட இதயத்தின் மேல் அறைகளுக்கு நடுல இருக்கிற தடுப்புச் சுவர்ல ஓட்டை இருக்குறது சகஜம்தான். குழந்தை பிறந்து 48 மணி நேரத்துல இந்த ஓட்டை தானாவே மூடிக்கும்னு ஒரு புத்தகத்துல படிச்சேன்’’
‘‘முதல்ல பார்த்த டாக்டரே கொஞ்சம் பொறுமையா எடுத்து சொல்லியிருக்கனும். ஒரு வாரமா உங்க அக்கா மகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு?  எல்லாத்துக்குமே இப்ப செகன்ட் ஒபினீயன் தேவையாயிருக்கு.  அதிலும் இது இரண்டு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னையாச்சே. தாங்க்ஸ் ராணி’’

Leave a Reply