- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

சைதாப்பேட்டையில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் பிரம்மா குமாரிகள் இயக்கம் ஏற்பாடு…

சென்னை, மார்ச். 6-
பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், சென்னை சைதாப்பேட்டையில், 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு

மகா சிவராத்திரியை முன்னிட்டு, பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், சென்னை மேற்கு சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள வி.கே.எம்.மகாலில் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

ஒரே இடத்தில்

இதில், 12 ஜோதிர் லிங்கத்தையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு கிடைத்துள்ளது என்று, பிரம்மா குமாரிகள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில்  ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது. மற்றவை வடமாநிலங்களில் உள்ளன. இந்த தலங்களில் சிவலிங்கங்கள் எப்படி அமைந்துள்ளனவோ அதேபோன்று சென்னையில் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சியில் ேஜாதிர்லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உலக நாடகச்சக்கரம், இறைவன் மற்றும் ராஜயோகம் பற்றிய விழிப்புணர்வு படக்காட்சியும் இடம்பெற்றுள்ளன. இறைவனோடு மனம்-புத்தியை இணைய வைக்கும் தியானப்பயிற்சிக்குடிலும் அமைக்கப்பட்டுள்ளது. மனிதன் 5 தத்துவங்கள்-இறைவன் பற்றிய வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது.
8-ந் தேதி வரை

ஜோதிர்லிங்க தரிசனம் 8-ந் தேதி வரையில் நடைபெறுகிறது. காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க பிரம்மா குமாரிகள் அமைப்பின் சென்னை சைதாப்பேட்டை பகுதி பொறுப்பு சகோதரி தேவி மற்றும் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

தொடக்க நிகழ்ச்சியில், சென்னை மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம், பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் ராஜயோகா பயிற்சியாளர் பி.கு.கலாவதி, தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply