- செய்திகள், விளையாட்டு

சைக்கிள் பந்தயத்தில் மேலும் இரண்டு தங்கம்

 

இந்திய அணி சைக்கிள் பந்தயத்தில் நேற்றைய ஆட்டத்தில் இரண்டு தங்கங்களை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற ஆடவர் 70 கிலோ மீட்டர் டைம் டிரயல் அணிப் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் பன்வர், மன்ஜீத் சிங், தீபக் குமார் ரஹி, மனோகர் லால் பிஷோனி ஆகியோர் 1 மணி நேரம் 29 நிமிஷங்கள் 37.840 விநாடிகளில் இந்த தூரத்தைக் கடந்து தங்கம் வென்றனர்.

மகளிர் 40 கிலோ மீட்டர் டைம் டிரயல் அணிப் பிரிவில் இந்தியாவின் வித்யாலெட்சுமி, ருதுஜா சத்புதே, மணிஷா, சோபா தேவி ஆகியோர் இணைந்து தங்கம் வென்றனர். இவர்கள் 59.23 விநாடிகளில் இந்த தூரத்தைக் கடந்தனர்.

வித்யாலெட்சுமி,அரவிந்துக்கு இது இரண்டாவது தங்கம் ஆகும். வித்யாலெட்சுமி மகளிர் 30 கிலோ மீட்டர் தனி நபர் பிரிவிலும் அரவிந்த் 40 கிலோ மீட்டர் தனி நபர் பிரிவிலும் ஏற்கெனவே தங்கம் வென்றுள்ளனர்.

முதல் நாளில் இந்தியா 2 தங்கம் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கம் வென்றது. ஆக மொத்தம் இந்தியா இது வரை 5 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது.

Leave a Reply