- செய்திகள், வணிகம்

சேவைகள் ஏற்றுமதி 13 சதவீதம் குறைந்தது

 

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள `சேவைகளில் சர்வதேச வர்த்தகம்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த பிப்ரவரி மாதத்தில் சேவைகள் ஏற்றுமதி 12.6 சதவீதம் குறைந்து 1,233 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் இது 1,409 கோடி டாலராக இருந்தது. 2016 பிப்ரவரி மாதத்தில் சேவைகள் இறக்குமதி 8.9 சதவீதம் சரிந்து 719 கோடி டாலராக குறைந்துள்ளது. 2015 பிப்ரவரி மாதத்தில் 789 கோடி டாலராக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைகள் துறையின் பங்கு 55 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply