- செய்திகள், மாநிலச்செய்திகள்

சேலத்தில் இருந்து 2 டன் பூக்கள் அனுப்பப்பட்டன திருப்பதி கோவிலில் ரதசப்தமி விழா

சேலம், பிப். 13:- திருப்பதியில் நடைபெறும் ரதசப்தமி விழாவுக்காக சேலத்தில் இருந்து 2 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதி கோவிலுக்கு..
சேலம் டி.ஆர்.எஸ். மண்டபத்தில் பக்திசாரர் பக்த சபா சார்பில், திருப்பதியில் நடக்கும் பூவாரி ரதசப்தமி விழாவுக்கு ஆண்டுதோறும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் திருப்பதி  தேவஸ்தானத்திற்கு தேவையான பூக்கள் தொடுக்கும் பணி தொடங்கியது. இதில் பக்த சபாவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இரவும், பகலுமாக பூக்களை தொடுத்தனர்.
2 டன் பூக்கள்
இதனைத் தொடர்ந்து 2 டன் பூக்கள் கட்டி முடிக்கப்பட்டு திருப்பதிக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு, சாமந்தி பூக்களை கொண்டு வந்து கொடுத்தனர்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:
தற்போது திருப்பதியில் நடக்கும் பூவாரி ரதசப்தமி விழாவிற்காக 2 டன் பூக்களை அனுப்பி வைத்துள்ளோம். இது தவிர பெங்களூரில் இருந்து 2 லட்சம்  ரூபாய்க்கு பூக்கள் வாங்கி திருப்பதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply