- செய்திகள், வணிகம்

செவர்லெட் கார்கள் விலை உயருகிறது

(வர்த்தகம்)ஜனவரி 2-ந் தேதி முதல்
2016 ஜனவரி 2-ந் தேதி முதல்  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது அனைத்து மாடல் செவர்லெட் கார்களின் விலையை 2 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில் அண்மையில் அறிமுகம் செய்த ட்ரெயில்பிளைசர் காருக்கு இது பொருந்தாது. உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, அன்னிய செலாவணியில் நிலையற்ற தன்மை போன்றவற்றின் பாதிப்பால் கார்களின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ரூ.4.2 லட்சம் முதல் ரூ.16.85 லட்சம் வரை பல்வேறு மதிப்பில் சிறிய கார் பீட் முதல் செடான் க்ருசே பல்வேறு மாடல் கார்களை உள்நாட்டில் விற்பனை செய்து வருகிறது.

Leave a Reply