- செய்திகள், வணிகம்

செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 104 கோடியை தாண்டியது

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 104 கோடியை தாண்டிவிட்டது. இது முந்தைய மாதத்தை காட்டிலும் 0.66 சதவீதம் அதிகமாகும். 2015 டிசம்பர் மாதத்தில் இது 103.64 கோடியாக இருந்தது. 2016 ஜனவரி மாதத்தில் மட்டும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் புதிதாக 70 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளன. மேலும், உள்நாட்டில் ஒட்டு மொத்த அளவில் தொலைத்தொடர்பு அடர்த்தி 81.83 சதவீதத்தில் இருந்து 82.30 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது சராசரியாக  100 பேருக்கு எவ்வளவு செல்போன் இணைப்பு உள்ளது என்பதை குறிப்பிடுவதாகும்.
பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் இரவு நேரத்தில் இலவச அன்லிமிடட் கால்களை வழங்கிய போதும், லேண்ட் லைன் இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த லேண்ட் லைன் இணைப்புகளின் எண்ணிக்கை 2.53 கோடியாக குறைந்துள்ளது. 2015 டிசம்பர் மாதத்தில் இது 2.55 கோடியாக இருந்தது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply