- செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கடல்குதிரை பறிமுதல் சிங்கப்பூருக்கு கடத்த முயற்சி…

ஆலந்தூர், ஆக. 18- சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி கடல் குதிரை பறிமுதல் செய்யப்பட்டது.
கடல் குதிரை

சென்னை விமான நிலையத்தில் நே்றறு அதிகாலை சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் வைத்திருந்த பையை மத்திய தொகுப்பில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அதில் சுமார் 8 கிலோ எடை உள்ள காய்ந்த நிலையில் இறந்த கடல்குதிரை இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவற்றின் மதிப்பு ரூ.5 ேகாடி இருக்கும்.

கைது

விசாரணையில் முகமது யூசுப் கடல் குதிரையை மருந்து தயாரிக்க பயன்படுத்துவதற்காக சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரிந்தது. இதையடுத்து முகமது யூசுப்பை அதிகாரிகள் கைது செய்தனர். 8 கிலோ கடல் குதிரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply