- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

சென்னை பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி

சென்னை,பிப்.4-

சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.75 லட்சம் ேமாசடி செய்த கணவன் மனைவியும், அவர்களுக்கு உதவியாக இருந்த ஏஜெண்டும் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கடந்த டிசம்பர் 9-ந் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.

3 பேர் கைது

அந்த புகார் மனுவில், சென்னை சூளை அங்காளம்மன் கோவில் ெதருவை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 38), அவரது கணவர் மோகன்(50) ஆகியோர் தன்னிடமும், தன்னைப் போல 28 பேர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.75 லட்சத்து 40 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர், என்று கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து கமிஷனர் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி  தடுப்பு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீலாவதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஜயலட்சமி, மோகன் மற்றும் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஏஜெண்ட் பிரகாஷ்(29) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

நீதிமன்றத்திலும் வழக்கு

கைது செய்யப்பட்ட விஜயலட்சமி பி.எஸ்.சி படித்துள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மோகன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவரும் சேர்ந்து தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அறிமுகமானவர்களிடம் டி.பி.ஐ.யில் வேலை வாங்கித் தருவதாக  கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வாங்கி உள்ளனர். இவர்களுக்கு ஏஜெண்டாக பிரகாஷ் செயல்பட்டுள்ளார். இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

பிரகாஷ் பூந்தமல்லி ரோட்டில் உள்ள கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர்கள் மூவரும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் காசோலை மற்றும் வெற்று பத்திரங்களிலும் கையெழுத்து பெற்றுள்ளனர். பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை இழந்தவர்கள் மீதே விஜயலட்சுமியும், மோகனும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சொந்த தேவைக்காக கடன் வாங்கியதாக வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கி மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply