- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை,பிப்.17-
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ெவளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டில், எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.காம், எம்.எஸ்.டபிள்யூ, எம்.பி.ஏ போன்ற முதுகலை பட்டப்படிப்புகளுக்கும், பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.பி.எம் போன்ற பட்டப்படிப்புகளுக்கும் கடந்த நவம்பர் 2015-ல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நாளை (18-ந் தேதி) வெளியிடப்படுகிறது.
இந்த பாடங்களில் மதிப்ெபண் மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்வோரும், 2013-14-ம் ஆண்டு எம்.சி.ஏ, எம்.பி.ஏ பகுதிநேர படிப்புகளுக்கும், இளங்கலை பகுதி நேர படிப்புகளுக்கு தேர்வு எழுதியோரும் மறு மதிப்பீடு செய்ய வரும் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 1000 ரூபாய்க்கு பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரில் வரும் 25-ந் தேதிக்குள் கேட்பு காசோலை எடுக்க வேண்டும்.
மேலும் பாடங்களில் மறு கூட்டல் வேண்டுவோர் மேற்கண்ட இணையதள முகவரியில் வரும் 19-ந் தேதி முதல் 25-ந் தேதிக்குள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.300 கேட்பு காசோலை எடுத்து 25-ந் தேதிக்குள் பதிவாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply